/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தே ரூபாயில் மதிய சாப்பாடு
/
பத்தே ரூபாயில் மதிய சாப்பாடு
ADDED : டிச 29, 2025 06:02 AM

காந்திபுரம்: பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்குகிறது, பா.ஜ.வின் மோடி கிச்சன்.
வாஜ்பாயின் 101வது பிறந்த நாள் டிச.25 முதல் 31 வரை விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ. அலுவலகம் முன், 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் துவக்கி வைத்தார்.
ரமேஷ்குமார் கூறியதாவது: ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சுவையான உணவை, தரமாகவும் மலிவாகவும் வழங்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தக்காளி, எலுமிச்சை, தேங்காய், காய்கறி, புளி என்று ஐந்து வகையான உணவு அன்றாடம் பகல், 12 முதல் மதியம், 2 மணி வரை விற்கப்படும். முதலில் இலவசமாக கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம் இலவசமாக எதை கொடுத்தாலும் அதன் மதிப்பை யாரும் உணர மாட்டார்கள். அதனால் 10 ரூபாய் விலை வைத்தோம்.
இத்திட்டம் இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் கிருஷ்ண பிரசாத் ஏற்பாட்டில் துவங்கியுள்ளது. இதற்கு, 'மோடி கிச்சன்' என்று பெயரிட்டுள்ளோம். இது ஆண்டு முழுவதும் ஒரு நாள் விடாமல் தொடரும்.
இவ்வாறு, அவர் கூறினார். ராம் நகர் இளைஞரணி மண்டல தலைவர் ஹரிஹரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

