/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி மா.கம்யூ., பிரசார பயணம்
/
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி மா.கம்யூ., பிரசார பயணம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி மா.கம்யூ., பிரசார பயணம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி மா.கம்யூ., பிரசார பயணம்
ADDED : ஜூன் 17, 2025 11:03 PM
கோவை; தமிழக அரசு கூடுதலாக மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த கோரி, மா.கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நடந்து.
கோவை மா.கம்யூ., நகரக்குழு சார்பில், நடந்த இந்த பிரசார பயணத்தில், பேரூர் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து, மழை நீர் வடிகால் கால்வாய்களில் தேங்கியிருக்கும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும், கோவை மாநகராட்சியின் ஆறு சதவீத சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது.
இந்த பிரசார பயணம் பேரூரில் துவங்கி, வேலாண்டிபாளையம், பி.என்.புதுார், சீரநாயக்கன்பாளையம், பூசாரி பாளையம், தெலுங்கு பாளையம் மற்றும் செல்வபுரம் பகுதியில் முடிந்தது.
மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு செயலாளர் சாந்தாராம், மாவட்ட குழு உறுப்பினர் மலையரசி மற்றும் நகர குழு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.