/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 13ல் மாகாளியம்மனுக்குதிருக்கல்யாணம்
/
வரும் 13ல் மாகாளியம்மனுக்குதிருக்கல்யாணம்
ADDED : மார் 06, 2024 09:12 PM
நெகமம், : செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில், வரும், 13ம் தேதி, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
நெகமம், செட்டியக்காபாளையம், மாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம், நோன்பு சாட்டப்பட்டது. நேற்று முதல், வரும் 11ம் தேதி வரை தினசரி காலையில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
12ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு, பெருமாள் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வரப்படுகிறது. 13ம் தேதி, காலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்புஅலங்கார பூஜைகள் நடக்கிறது.
15ம் தேதி, காலை 7:00 மணிக்கு, அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், கும்மி அடித்தல் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கனி வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.

