sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களில் வரும் 8ல் மஹா சிவராத்திரி

/

கோவில்களில் வரும் 8ல் மஹா சிவராத்திரி

கோவில்களில் வரும் 8ல் மஹா சிவராத்திரி

கோவில்களில் வரும் 8ல் மஹா சிவராத்திரி


ADDED : மார் 04, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 04, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மஹா சிவராத்திரி விழா வரும், 8ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா வரும், 8ம் தேதி மாலை, 6:30 மணிக்கு போளியகவுண்டன்பாளையம் சம்பத் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு கணபதி ேஹாமமும் நடக்கிறது.

இரவு, 8:00 மணிக்கு ராசக்காபாளையம் வாழும் கலை குழுவினரின்சத்சங்கம்; இரவு, 9:00 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

தொடர்ந்து, முதல் கால அபிேஷகம், இரவு, 10:30க்கு சிறப்பு கிராமிய கலை நிகழ்ச்சிகள், நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், நள்ளிரவு, 1:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

தொடர்ந்து, நள்ளிரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், அதிகாலை, 3:00 மணிக்கு தீபாராதனை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதசேவை, அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

* செல்லப்பம்பாளையம் பிரிவு சுந்தரமகாலிங்கேஸ்வர பிருந்தாவன சித்தர் பீடம், ஆனந்த வள்ளித்தாயார் உடனுறை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில், 31ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா வரும், 8ம் தேதி நடக்கிறது.

அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ேஹாமம், மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை பிரதோஷ வழிபாடு, இரவு, 6:30 மணிக்கு முதற்கால பூஜை, பள்ளயம், மலர் வழிபாடும், இரவு, 7:00 மணிக்கு வள்ளி கும்மியாட்டம், தேவராட்டம்; இரவு, 9:30 முதல், 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பொங்கல், மலர் வழிபாடு நடக்கிறது.

நள்ளிரவு, 12:00 மணி முதல், 1:00 மணி வரை போற்றி வழிபாடு, தேவாரம், திருவாசகம், பாராயணம், மூன்றாம் கால பூஜை, மலர் வழிபாடு, அரளி, வில்வம் வழிபாடு; அதிகாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை கும்மியாட்டம், நிவேதனம், பால் பாயாசம், நான்காம் கால பூஜை நிவேதனம், பொங்கல் வைத்து வழிபாடு நடக்கின்றன.காலை, 6:00 மணிக்கு மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு முழுவதும் அன்னதானமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us