UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:24 PM
சூலூர்: வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மக்காச்சோள விதைகள் வழங்கப்படுகின்றன.
சுல்தான்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) அருள் கவிதா அறிக்கை:
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 1,000 ஹெக்டர் பரப்பில் மக்காச்சோள சாகுபடி நடக்கிறது. வேளாண் துறை சார்பில், சுல்தான்பேட்டை மற்றும் செஞ்சேரிபுத்தூர் கிடங்கில், 2 ஆயிரத்து, 600 கிலோ மக்காச்சோள விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டருக்கு, 10 கிலோ வீதம் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படுகின்றன. ஒரு கிலோ விதையின் விலை, 205 ரூபாய். இதில், 100 ரூபாய் மானியத்தை அரசு வழங்குகிறது. 105 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள், ஆதார் நகல், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் சுல்தான்பேட்டை வட்டார வேளாண் துறை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
