/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையப்ப சுவாமி தங்கத்தேரில் பவனி; தென்திருப்பதியில் கோலாகலம்
/
மலையப்ப சுவாமி தங்கத்தேரில் பவனி; தென்திருப்பதியில் கோலாகலம்
மலையப்ப சுவாமி தங்கத்தேரில் பவனி; தென்திருப்பதியில் கோலாகலம்
மலையப்ப சுவாமி தங்கத்தேரில் பவனி; தென்திருப்பதியில் கோலாகலம்
ADDED : மார் 30, 2025 11:01 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் பகுதியில் தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது.
இங்கு தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம், பலி, சாற்றுமுறை, ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து மாலை ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், தங்கத்தேர் பக்தர்களின், 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க, நான்கு ரத வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து நிறைவாக நிலையை வந்தடைந்தது.