/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் சென்ற பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர் கைது
/
சாலையில் சென்ற பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர் கைது
சாலையில் சென்ற பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர் கைது
சாலையில் சென்ற பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர் கைது
ADDED : ஏப் 04, 2025 11:46 PM
கோவை; கணபதி, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண், அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 2ம் தேதி இரவு 7:30 மணிக்கு சரவணம்பட்டி, வெற்றி விநாயகர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் வந்த நபர் ஒருவர் தனது பேன்ட்சை கழற்றி, அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார்.
இதைப்பார்த்த அப்பெண் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அந்த நபர், அங்கிருந்து ஓடினார்.
சம்பவம் குறித்து அப்பெண், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த நபர் இதேபோன்று, பலரிடம் நடந்து கொண்டது தெரியவந்தது.
அப்பகுதியில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில், சாலையில் அநாகரிகமாக நடந்து கொண்டது, அதே பகுதியில் வசிக்கும் மனோஜ் குமார், 36 என்பது தெரியவந்தது.
போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.