/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காகிதத்தை பணம் எனக்கூறி மோசடி செய்த நபர் கைது
/
காகிதத்தை பணம் எனக்கூறி மோசடி செய்த நபர் கைது
ADDED : டிச 09, 2024 04:46 AM
சூலுார் : குறைந்த வட்டியில் பணம் வாங்கி தருவதாக கூறி, வெள்ளை பேப்பர்களை பணம் எனக்கூறி, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, உப்பிலிபாளையமம் ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் சுகந்தி,44; மகளிர் சுய உதவி குழு நிர்வாகி. பட்டணத்தை சேர்ந்தவர் ஜான்சி, 31.
இவர்களுக்கு, செலக்கரச்சலை சேர்ந்த விஜயா என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
சுகந்தியிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய அவர், சரியென்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன், 6.5 கோடி ரூபாய் பணம் தயாராக பழநியில் உள்ளதாகவும், தனக்கான கமிஷனை கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு விஜயா கூறியுள்ளார்.
அங்கு சென்ற சுகந்தியை, அன்பழகன் என்ற நபர் அழைத்து சென்று பணக்கட்டுகளை காட்டியுள்ளார்.
பணத்தை, பட்டணம் கொண்டு வந்து கொடுப்பதாக, அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, பணக்கட்டுகளை பட்டணம் கொண்டு வந்த அவர், வீட்டில் வைத்துவிட்டு பூட்டி சென்றுள்ளார். நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர், அந்த வீட்டை திறந்து பணக்கட்டுளை பார்த்தனர்.
அத்தனையும், வெள்ளை பேப்பர்களாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சூலுார் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிந்த போலீசார், சிவகங்கையை சேர்ந்த அன்பழகனை கைது செய்தனர். தலைமறைவான விஜயாவை தேடிவருகின்றனர்.