UPDATED : அக் 12, 2026 09:20 PM
ADDED : அக் 12, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: செல்லப்பம்பாளையத்தில், மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ் .ஐ. அப்துல் முத்தலிப் தலைமையில் போலீசார் நேற்று மதியம் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
இதில் திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன், 29. என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பிடிபட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து, அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
