/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருள் வைத்திருந்தவர் கைது
/
புகையிலை பொருள் வைத்திருந்தவர் கைது
ADDED : மார் 18, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாமரைகுளம் பகுதியில், புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி, கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கனகசபாபதி, 48, கூலி தொழிலாளி. இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் ரயில்வேகேட் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், சந்தேகத்தின் பெயரில் கனகசபாபதியிடம் விசாரணை செய்தனர். இதில், அவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 300 கிராம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.