/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
/
ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : அக் 14, 2025 10:36 PM

கோவை; கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், போதைப் பொருட்கள் கடத்தல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஷாலிமர் - திருவனந்தபுரம் (22642) எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை, போலீசார் கண்காணித்தனர். அப்போது ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணி ஒருவர், மூட்டை ஒன்றுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். மூட்டையில் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர் பொள்ளாச்சி, பொங்காலியூரை சேர்ந்த சபரிநாதன், 28 எனத் தெரிந்தது. வட மாநிலம் சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 8.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.