/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரிக்கு அடியில் படுத்து துாங்கியவர் சக்கரம் ஏறி பலி
/
லாரிக்கு அடியில் படுத்து துாங்கியவர் சக்கரம் ஏறி பலி
லாரிக்கு அடியில் படுத்து துாங்கியவர் சக்கரம் ஏறி பலி
லாரிக்கு அடியில் படுத்து துாங்கியவர் சக்கரம் ஏறி பலி
ADDED : அக் 09, 2025 03:19 AM
அன்னுார்'லாரிக்கு அடியில் படுத்து தூங்கியவர், சக்கரம் ஏறியதில் பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம், காட்டம்பட்டியைச் சேர்ந்த நாகன் மகன் மருதன், 55; தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை குப்பேபாளையம் நால்ரோடு அருகே, டிப்பர் லாரிக்கு கீழ் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
மாலை 4:30 மணிக்கு டிப்பர் லாரி டிரைவர் ஸ்ரீகாந்த், லாரியை இயக்கினார். இதில் லாரியின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த மருதன் மீது டயர் ஏறியதில், படுகாயம் அடைந்தார்.
அன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து, அன்னுார் போலீசார் லாரி டிரைவர் ஸ்ரீகாந்த் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.