/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ வாடகை தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து
/
ஆட்டோ வாடகை தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 22, 2025 11:52 PM
பெ.நா.பாளையம்,; சின்னதடாகம் குட்டைவழியைச் சேர்ந்தவர் மனோஜ், 23; ஆட்டோ டிரைவர். கடந்த, 11ம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த ராமு, 41, மனோஜ் ஆட்டோவில் சிவானந்த காலனி, துடியலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பினார்.
ஆனால், வாடகை தரவில்லை. நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர் மனோஜ், ராமு வீட்டுக்கு சென்று வாடகை பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மனோஜின் அண்ணன் ரஞ்சித் குமார், ராமுவை தட்டி கேட்டுள்ளார்.
இதில், ஆத்திரம் அடைந்த ராமு, ரஞ்சித் குமாரை கத்தியால் குத்தினார். இதில், ரஞ்சித்குமார் கையில் காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.