/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்த பணியாளர்களை சேர்க்க லஞ்சம் பெற்றவர் 'சஸ்பெண்ட்'
/
ஒப்பந்த பணியாளர்களை சேர்க்க லஞ்சம் பெற்றவர் 'சஸ்பெண்ட்'
ஒப்பந்த பணியாளர்களை சேர்க்க லஞ்சம் பெற்றவர் 'சஸ்பெண்ட்'
ஒப்பந்த பணியாளர்களை சேர்க்க லஞ்சம் பெற்றவர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 28, 2025 03:56 AM
கோவை : கோவை அரசு மருத்துவமனையில், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கிரிஸ்டல் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் நாகேந்திர வீரக்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் கிரிஸ்டல் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்பாளர்கள், செக்யூரிட்டி, அடிப்படை மற்றும் துாய்மை உட்பட, 450 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள் நியமனம் சார்ந்த பொறுப்பு தனியார் நிறுவனத்தை சார்ந்தது.
கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், ஆறு பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, சமூகவலைத்தளங்களில் ஊழியர்கள் சிலர் பேசிய வீடியோ பரவியதால் பரபரப்பு நிலவியது. ஒரு ஊழியர் நியமனத்திற்கு, ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஒருவரிடம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''நியமனத்திற்கு பணம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிக்கு வருவதில்லை,'' என்றார்.