/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாத நோயாளியை சுத்தியலால் தாக்கியவர் சிறையில் அடைப்பு
/
வாத நோயாளியை சுத்தியலால் தாக்கியவர் சிறையில் அடைப்பு
வாத நோயாளியை சுத்தியலால் தாக்கியவர் சிறையில் அடைப்பு
வாத நோயாளியை சுத்தியலால் தாக்கியவர் சிறையில் அடைப்பு
ADDED : மே 17, 2025 01:19 AM
கோவை : மொபைல் போன் திருடியதாக சந்தேகப்பட்டு, கீழ்வாத நோயால் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடவள்ளி, கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 34. இவருக்கு கீழ்வாதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பிறரின் உதவி இல்லாமல் நடக்க முடியாத நிலையில் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, 43 என்பவரின் மொபைல் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது.
கார்த்திக் தான், மொபைலை திருடியதாக கூறி கருப்புசாமி சந்தேகப்பட்டு, அவரிடம் கேட்டார். கார்த்திக் மறுத்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி, கார்த்திக்கை சந்தித்த கருப்பசாமி, தனது மொபைலை திருடியதாக கூறி, தகாத வார்த்தைகளால் திட்டினார். சுத்தியலால் அவரின் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கினார். காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கார்த்திக் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கருப்புசாமி மீது, வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.