/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா
/
ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா
ADDED : டிச 12, 2024 05:42 AM
வால்பாறை; வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், 65ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி பூஜையும், சிறப்பு அபிேஷக, ஆராதனையும் நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கபட்டு, திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு மஹா தீபாராதனையும், 7:00 மணிக்கு அத்தாழபூஜை, 7:30 மணிக்கு சீவேலி பூஜை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஐயப்பன் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி இறைவனை மகிழ்வித்தனர்.
விழாவில், நாளை (13ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 6:30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு சீவேலி பூஜை நடக்கிறது. வரும், 14ம் தேதி காலை, 5:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:15 மணிக்கு உஷபூஜையும் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
மாலை, 3:00 மணிக்கு ஸ்டேன்மோர் ரோடு ராஜிவ்காந்திநகர் மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து, நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை சென்றடைகின்றனர். வரும், 15ம் தேதி மாலை, 3:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16ம் தேதி வரை நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.