sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: வரும் 3ம் தேதி துவக்கம்

/

மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: வரும் 3ம் தேதி துவக்கம்

மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: வரும் 3ம் தேதி துவக்கம்

மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: வரும் 3ம் தேதி துவக்கம்


ADDED : டிச 31, 2024 07:57 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது.

அன்னுாரில், 1,000 ஆண்டுகள் பழமையான மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 25ம் ஆண்டு தேர்த்திருவிழா வருகிற, 3ம் தேதி காலை 10:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது.

வரும் 4ம் தேதி காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. திருமுறை ஓதப்படுகிறது. வருகிற 5-ம் தேதி மாலை சந்திர வாகனத்தில், சுவாமி திருவீதி நடக்கிறது. இரவு சிகரம் குழுவின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 6ம் தேதி மாலை 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும், இரவு வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது. வரும் 7ம் தேதி மாலை 7:00 மணிக்கு செண்டை மேளம் மற்றும் ஜமாப்புடன், புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

வரும் 8ம் தேதி விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு பவளக்கொடி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது.

வருகிற 10ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை, அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், திருமுருகன் அறநிலைக் கழகத்தினர் மற்றும் மன்னீஸ்வர சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us