ADDED : பிப் 29, 2024 06:13 AM
கோவை : கோவை மேலாண்மை சங்கம் சார்பில், ரெசிடென்சி ஹோட்டலில் தேசிய மேலாண்மை தினம் கொண்டாடப்பட்டது. இதில், சக்தி சுகர் லிமிடெட் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., மற்றும் பிளாக் செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, அனைவரிடமும் அதீத நம்பிக்கையும், தீராத மோகமும் இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள், சிக்கல்களை அடையாளம் காண உதவும் கருவிகள் மட்டுமே. பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனித ஆற்றல் தேவைப்படும் என்பதை உணர வேண்டும்.
இந்தியாவில் மின்சார வாகனங்களி-ன் அதிக பயன்பாட்டிற்கு, கூடுதலாக ஆண்டுதோறும், 25,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு 4,000 மெகாவாட் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் திறன் மட்டுமே நம்மிடம் உள்ளது. இத்துறையில் அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், மேலாண்மை பிரிவுகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளுக்கு, இந்த ஆண்டுக்கான மேலாண்மை விருதுகளை, சக்தி சுகர் லிமிடெட் தலைவர் மாணிக்கம் வழங்கினார்.
சி.எம்.ஏ., அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், கோவை மேலாண்மை சங்கத் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
