தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுச்சூழலை பாதுகாக்க மாரத்தான் போட்டி

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாரத்தான் போட்டி

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாரத்தான் போட்டி


ADDED : ஆக 31, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டி நடந்தது.

கிணத்துக்கடவு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்து கிணத்துக்கடவில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியினை அமைப்பின் சார்பில் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

இதில், 13 முதல் 18 வயதுள்ள ஆண்கள், பெண்கள்- 3 கி.மீ., தூரம், 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் - 7 கி.மீ.,; பெண்கள் - 5 கி.மீ., தூரம் என, போட்டி நடத்தப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் ஒவ்வொரு பிரிவின் கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, மெடல், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கொய்யா, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிணத்துக்கடவு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை சேர்ந்த மணிகண்டகுமார் மற்றும் அமைப்பினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us