/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்
ADDED : ஜன 04, 2025 11:09 PM

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அதிகாலை, 4:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு மார்கழி பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்னபன பூஜைகள், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை, 9:40 மணிக்கு, ஸ்ரீ சிவகாமி உடனமர் நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும், மங்கள வாத்தியங்கள் முழங்க காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து, திருவெம்பாவை விண்ணப்பம் செய்யப்பட்டு, நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது.
இன்று முதல் தொடர்ந்து, 9 நாட்களும், காலையும், மாலையும் திருவெம்பாவை விண்ணப்பம் மற்றும் மாணிக்கவாசகர் திருவீதியுலா நடக்கிறது. மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பத்தாம் நாளான, வரும், ஜன., 13ம் தேதி, ஆருத்ரா தரிசன காட்சி நடக்கிறது.
திருவாதிரை உற்சவ துவக்கத்தையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.