/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தராபுரத்தில் மார்கழி உற்சவம் 9ம் ஆண்டு ஆன்மிக சொற்பொழிவு
/
சுந்தராபுரத்தில் மார்கழி உற்சவம் 9ம் ஆண்டு ஆன்மிக சொற்பொழிவு
சுந்தராபுரத்தில் மார்கழி உற்சவம் 9ம் ஆண்டு ஆன்மிக சொற்பொழிவு
சுந்தராபுரத்தில் மார்கழி உற்சவம் 9ம் ஆண்டு ஆன்மிக சொற்பொழிவு
ADDED : டிச 15, 2024 11:55 PM
போத்தனூர்;, 'மார்கழி உற்சவம்' எனும் ஆன்மிக சொற்பொழிவு, சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில், இன்று துவங்குகிறது.
9வது ஆண்டாக நடக்கும் இந்த சொற்பொழிவு, இந்தாண்டு இன்று துவங்குகிறது. மாலை, 5:30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில், இசைக்கவி ரமணன் 'ஒன்று; பரம்பொருள்' எனும் தலைப்பில் பேசுகிறார்.
நாளை, முனைவர் விஜய சுந்தரி 'மார்கழி பூவின் மகத்துவம்', மூன்றாம் நாள் சிவத்திரு பவானி தியாகராஜன் 'ஒவ்வொரு உயிரிலும் சிதம்பர ரகசியம்', நான்காம் நாள் கவிஞர் பாலசுப்ரமணியம் 'ஆழ்வார்கள்', ஐந்தாம் நாள் மரபின் மைந்தன் முத்தையா 'வேலும், மயிலும் புதியது', ஆறாம் நாள் முனைவர் ஷியாமளா 'ஆண்டாள் எனும் அருமருந்து' ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகின்றனர். ஏழாம் நாள் ஜோதி பார்வதி குழுவினரின் பகவான் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. சொற்பொழிவிற்கு முன் தினமும் துவக்க நிகழ்ச்சியாக, பேரூர் சதய விழா குழுவினரின், திருமுறை பாராயணம் நடக்கிறது.