sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

/

மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்


ADDED : பிப் 12, 2025 11:13 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் இரவு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

வரும், 17ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அணி எடுப்பு, 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மன் பண்டிகை மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசிநாள் அபிேஷகம்; வரும், 25ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வெளிப்பூவோடு துவங்குகிறது. இரவு,11:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி., பூவோடு; 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல், வரும், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது.

வரும்,6ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டமும்; 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், தேர்நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.8ம் தேதி காலை, மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி; 10ம் தேதி இரவு, மஹா அபிேஷகமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us