UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 04:44 PM
தீத்திபாளையம் கிராமத்தில், வரும் 14 ல் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
பேரூர் தாலுகாவுக்குட்பட்ட தீத்திபாளையம் கிராமத்துக்கான, மக்கள் தொடர்பு முகாம், வரும், 14 ல், காலை 10:30 மணிக்கு, சிறுவாணி மெயின் ரோடு, லோட்டஸ் மஹாலில் நடக்கிறது.
இதில், கலெக்டர் பவன் குமார், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மனுக்கள் மீது தீர்வு காண உள்ளார். வரும் 6 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., தலைமையில், தீத்திபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், மக்களிடமிருந்து அனைத்து துறை சார்ந்த மனுக்கள் பெறப்படுகிறது.
14 அன்று நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில், மனுக்களுக்கு தீர்வு காணப்பட உள்ளது. தீத்திபாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட தீத்திபாளையம் மற்றும் காளம்பாளையம் மக்கள், மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
