விரிவடைகிறது செம்மொழி பூங்கா தயார் ஆகிறது 'மாஸ்டர் பிளான்'
விரிவடைகிறது செம்மொழி பூங்கா தயார் ஆகிறது 'மாஸ்டர் பிளான்'
ADDED : மே 28, 2026 05:00 AM

கோவை: செம்மொழி பூங்காவை மேலும் 110 ஏக்கருக்கு விஸ்தரிக்கும் வகையில், தனியார் ஆலோசனை நிறுவனம் மூலமாக 'மாஸ்டர் பிளான்' தயாரித்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.
காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா மாநகராட்சியால் உருவாக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மத்திய சிறையை பிளிச்சிக்கு இட மாற்றம் செய்த பின், அவ்விடத்தில் பூங்கா விரிவாக்கம் செய்யப்படும் என முந்தைய தி.மு.க., அரசு அறிவித்தது.
மீதமுள்ள 110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யும் போது என்னென்ன வசதிகள் செய்யலாம் என்கிற ஆலோசனையை மாநகராட்சி துவக்கியிருக்கிறது.
'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணியில் தனியார் ஆலோசனை நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகளை ஈர்க்கும் வகையில் தீம் பார்க் உருவாக்கவும், வர்த்தக ரீதியாக தனியார் நிறுவனத்தினர் பொருட்காட்சி நடத்துவதற்கான இட வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ''செம்மொழி பூங்காவை விஸ்தரிக்க உத்தேசமாக ரூ.450 கோடி தேவைப்படும் என மதிப்பிட்டுள்ளோம்,'' என்றார்.
