தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் திறன் தேர்வு

மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் திறன் தேர்வு

மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் திறன் தேர்வு


ADDED : ஆக 17, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், மாணவர்களின் கணிதம், அறிவியல் திறனை மேம்படுத்த மாவட்ட அளவில் திறன் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரசு, தனியார் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

கணித திறன் தேர்வு, அக்., 4 மற்றும் அறிவியல் திறன் தேர்வு அக்., 11ல், காலை 11 முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கும். தேர்வுகளில் பங்கேற்க ஆக., 1 முதல் செப்.,10ம் தேதி வரை, https://tnstcmathtest.web.app/ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 வினாக்கள் இடம்பெறும். எதிர்மறை மதிப்பெண் கிடையாது. தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழுடன், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

தேர்வு தொடர்பான விவரங்களை, www.tnstc.in.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 94863 41068, 77089 42872 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us