UPDATED : நவ 28, 2026 02:54 PM
ADDED : நவ 28, 2026 02:54 PM
கோவை: கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ‘கணித அறிவியல் சங்கமம் – 2026’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதில், 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். கணிதம், அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், மாதிரிகள் மற்றும் தனித்திறமைகளை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் சிறந்த திறமையாளர்கள், கணிதப் பிரிவில் ‘கணித மேதை ராமானுஜன் விருது’, அறிவியல் பிரிவில் ‘சர் சி.வி.ராமன் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் டிச., 2ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 98949 71770 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
