/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதேஸ்வரர் கோயில் மகா உற்சவம்
/
மாதேஸ்வரர் கோயில் மகா உற்சவம்
ADDED : ஜன 18, 2026 05:31 AM

போத்தனூர்: கோவை, க.க. சாவடி அடுத்து பிச்சனூர், ரங்க சமுத்திரம் பிரிவில் ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த, 15ல் மகா உற்சவம் பெரிய அபிஷேகத்துடன் துவங்கியது.
நேற்று பால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தங்க ளது வளர்ப்பு மாடுகளிலிருந்து பால் கறந்து கொண்டு வந்து, மாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
பலர் சலங்கை மாடுடன் வந்து விளையாடினர். மண்ணால் செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் மாடு, கன்று, எருது, ஆடு, கோழிகளின் உருவாரத்தை நேர்த்திக்கடனாக செலுத்தி, பிரார்த்தனை செய்தனர்.
இவ்விழாவில், கேரள மாநிலம் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, கொழிஞ்சாம்பாறை, கோபாலபுரம், மேனோம்பாறை, எருத்தேன்பதி, வேலந்தாவளம் ஆகிய ஊர்களில் இருந்தும், பிச்சனூர், கிணத்துகடவு, தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்களும் திரளாக பங்கேற்று, மாதேஸ்வரரை தரிசித்து சென்றனர்.
இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை தரிசனத்துடன் உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஜெகன்னாதன் சுவாமி செய்திருந்தார்.

