/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மயோனைஸ்' பயன்படுத்த தடை; உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
/
'மயோனைஸ்' பயன்படுத்த தடை; உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
'மயோனைஸ்' பயன்படுத்த தடை; உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
'மயோனைஸ்' பயன்படுத்த தடை; உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 01, 2025 11:31 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள அசைவ உணவகங்களில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அசைவ உணவகங்களில், முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி 'மயோனைஸ்' தயாரிக்கப்படுகிறது. ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் 'மயோனைஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், 'மயோனைஸ்'க்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில், நகர் நல அலுவலர் தாமைரக்கண்ணன் தலைமையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட 'மயோனைஸ்' பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட, 'மயோனைஸ்' பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.உணவகங்களில், முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும், 'மயோனைஸ்' பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை மீறி பயன்படுத்துவது தெரிய வந்தால் உணவகங்கள், கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.