/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லூரில் ரயில்களை நிறுத்தணும் வலியுறுத்தி ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
சிங்காநல்லூரில் ரயில்களை நிறுத்தணும் வலியுறுத்தி ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிங்காநல்லூரில் ரயில்களை நிறுத்தணும் வலியுறுத்தி ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிங்காநல்லூரில் ரயில்களை நிறுத்தணும் வலியுறுத்தி ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2024 04:46 AM

கோவை : சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில், ரயில்களை நிறுத்த வலியுறுத்தி, ம.தி.மு.க., மற்றும் சிங்கநல்லூர் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
நாகர்கோவில் -கோவை (16321), கோவை- நாகர்கோவில் (16322), பாலக்காடு-திருச்சி (16824) ரயில்கள் முன்பு சிங்காநல்லூரில் நிறுத்தப்பட்டன. தற்போது, இவை சிங்காநல்லூரில் நிறுத்தப்படுவதில்லை.
கோவை- சேலம், சேலம் -கோவை மெமு ரயிலும் தற்போது நிறுத்தப்படுவதில்லை. இந்த ரயிலை பராமரிப்புப் பணி எனக் கூறி, அவ்வப்போது ரத்து செய்து வந்தனர்.
கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து இயக்குவது இல்லை. ரத்து செய்வது குறித்து அறிவிப்பைக்கூட செய்வது இல்லை.
ஈரோடு -கோவை, சேலம்-பாலக்காடு ரயில்கள் காலை 8:15, 8:45 மணிக்கு நகருக்குள் வரும்போது நிற்கின்றன.
மாலை வெளியே செல்லும்போதும் நிற்கின்றன. அதாவது, கோவையில் இருந்து காலையில் சோமனூர், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு செல்பவர்களுக்கு, இங்கு ரயில் நிற்பதில்லை. அதேபோல் மாலை அங்கிருந்து திரும்புபவர்களுக்கும் ரயில் இல்லை.
இதனால், பஸ்சை மட்டும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதி மக்களின் நலன் கருதி, சிங்காநல்லூரில் ரயில்கள் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ம.தி.மு.க., கோவை மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், 55வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் தர்மராஜ், சிங்காநல்லூர் ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் மனோகரன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

