/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு பணி; நிரந்தர தீர்வு காண நாளை கலந்தாய்வு
/
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு பணி; நிரந்தர தீர்வு காண நாளை கலந்தாய்வு
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு பணி; நிரந்தர தீர்வு காண நாளை கலந்தாய்வு
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு பணி; நிரந்தர தீர்வு காண நாளை கலந்தாய்வு
ADDED : அக் 01, 2024 11:04 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அளவீடு பணிகள் மேற்கொண்டு சமப்படுத்தப்பட்டன. தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளுக்கான ஆலோசனை கூட்டம் நாளை (3ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தபால் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பு எடுக்கும் பணி நடந்தது.
தொடர்ந்து, மீன்கரை ரோட்டில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் உதவியுடன் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன. தற்போது, அந்த இடம் அளவீடு செய்து சமப்படுத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, மோதிராபுரம் பிரிவு அருகே நிரந்தர ஆக்கிரமிப்புகள் கடந்த மாதம், 25 மற்றும், 26ம் தேதிகளில் அகற்றப்பட்டன.அகற்றப்பட்ட இடத்தை மறுஅளவீடு செய்து நெடுஞ்சாலைத்துறை எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டது.
தள்ளுவண்டி கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், டெம்போ ஸ்டாண்ட், பூக்கடைகள் உள்ளிட்ட தற்காலிக ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, 3ம் தேதி (நாளை) பொள்ளாச்சி தாசில்தார் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ், நகராட்சி கமிஷனர், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஆக்கிரமிப்புகளை முழு வீச்சில் அகற்ற நெடுஞ்சாலைத்துறை வாயிலாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.