sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வெள்ளலுார் குப்பை கிடங்கில் கண்காணிப்பு தீ விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

/

 வெள்ளலுார் குப்பை கிடங்கில் கண்காணிப்பு தீ விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

 வெள்ளலுார் குப்பை கிடங்கில் கண்காணிப்பு தீ விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

 வெள்ளலுார் குப்பை கிடங்கில் கண்காணிப்பு தீ விபத்துக்களை தடுக்க நடவடிக்கை


ADDED : மார் 14, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 14, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை வெள்ளலுார் குப்பை கிடங்கில் தீ விபத்துக்களை தடுக்கும் வகையில், 8 பேர் கொண்ட குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் தற்போது, 153 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலங்களில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. தீவிபத்து ஏற்படும் சமயங்களில், காற்று மாசுபடுவதுடன், அப்பகுதி மக்கள் புகையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கோடைக்காலம் துவங்கவில்லை எனினும், வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தீ விபத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் கூறுகையில், '' வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் தீ விபத்து தடுக்கும் வகையில், 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் முழுநேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி தரப்பில் தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர். அனைத்து வசதிகளுடன் வாகனம் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வரும், ஜூன் மாதம் வரை இக்கண்காணிப்பு பணிகள் தொடரும், '' என்றார்.






      Dinamalar
      Follow us