தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நீர்நிலையில் இறைச்சி கழிவு வீசுவதை தடுக்க நடவடிக்கை

நீர்நிலையில் இறைச்சி கழிவு வீசுவதை தடுக்க நடவடிக்கை

நீர்நிலையில் இறைச்சி கழிவு வீசுவதை தடுக்க நடவடிக்கை


UPDATED : நவ 13, 2026 05:53 PM

ADDED : நவ 13, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 05:53 PM ADDED : நவ 13, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், ஓடையில் இறைச்சி கழிவுகளை வீசக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மரப்பேட்டை, கண்ணப்பநகர் வழியாக ஓடை செல்கிறது. இந்த ஓடை ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் கலக்கிறது.

ஓடையில் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிகளவு கலப்பதால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் முறையாக செல்லாமல் தேங்குகிறது. இந்த ஓடை அருகே வசிக்கும் மக்கள், கழிவுநீர் பிரச்னையால் சிரமப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்தது.

இந்நிலையில், மழை காலங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும், குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகாமல் இருக்கவும், நகராட்சி சார்பில் துார்வாரப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றப்பட்ட நிலையில், தற்போது ஓடையில் கழிவுநீர் தடையின்றி செல்கிறது.

இதில், கழிவுகளை கொட்டக்கூடாது என நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், ‘ஓடையில் இறைச்சி கழிவுகளையோ, குப்பையையோ கொட்டக்கூடாது. நீர் நிலைகளை காப்போம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இங்கு கழிவுகளை கொட்டுவதால் ஓடையில் கழிவுநீர் செல்வது பாதிக்கும்.

எனவே, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓடையில் இறைச்சிக்கழிவுகள், குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us