/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம்
ADDED : நவ 14, 2024 04:15 AM
பொள்ளாச்சி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. நாளை, 15ம் தேதி காலை, 9:30 முதல் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
இதில், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை, தேவையான உதவி உபகரணங்கள், உதவித்தொகை பெறுவதற்கான பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளும், மாணவர்களும் பங்குபெறலாம். குறிப்பாக, தேவையான ஆவணங்களை எடுத்து வந்து பயனடையுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.