/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
ADDED : செப் 26, 2025 09:27 PM
வால்பாறை:
வால்பாறை நகரில், நாளை (28ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
பொள்ளாச்சி லயன்ஸ் கிளப், கோழிப்பாறை அஹல்யா டயாபடீஸ் மருத்துவமனை, அஹல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் நாளை (28ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
வால்பாறை நகரில் உள்ள சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமில், நீரழிவுநோய், நெஞ்சுவலி, மார்பு இறுக்கம், தலைவலி, தலைசுற்றல், குடல் இறக்கம், மூலம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என, கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.