/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
/
மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
ADDED : அக் 16, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின், பொள்ளாச்சி தெற்கு வட்டாரம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நாளை (18ம் தேதி) ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட, 16 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மருத்துவ நிர்வாகம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.