/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ உபகரணங்கள் தர ஆய்வகம்; கல்லுாரி வளாகத்தில் இடம் தேர்வு
/
மருத்துவ உபகரணங்கள் தர ஆய்வகம்; கல்லுாரி வளாகத்தில் இடம் தேர்வு
மருத்துவ உபகரணங்கள் தர ஆய்வகம்; கல்லுாரி வளாகத்தில் இடம் தேர்வு
மருத்துவ உபகரணங்கள் தர ஆய்வகம்; கல்லுாரி வளாகத்தில் இடம் தேர்வு
ADDED : செப் 30, 2025 11:17 PM
கோவை; கோவையில், 20 ஆயிரம் சதுரடியில் மருத்துவ உபகரணங்கள் ஆய்வகம், ரூ.29.67 கோடியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் - மே மாதங்களில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. கவுண்டம்பாளையம் பகுதியில், 90 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில அளவைத்துறை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்து உறுதி செய்த இடத்தில், சட்ட ரீதியான சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், அவ்விடம் கிடைப்பதில் இழுபறி நிலவியது. இரு ஆண்டுக்குள் ஆய்வகம் அமைக்காவிட்டால், நிதி பயன்பாட்டில் சிக்கல் ஏற்படும் என்பதால், மீண்டும் கோவையில் இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியது.
இறுதியாக, அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லுாரி டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''நிலத்தை பொதுப்பணித்துறை தேர்வு செய்து, சாத்திய கூறு ஆய்வு செய்து கொடுத்தனர். மருத்துவ கல்வி இயக்குனரக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில் தோழி விடுதி அருகே, ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.