/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவறையில் மருத்துவ மாணவியின் சடலம்
/
கழிவறையில் மருத்துவ மாணவியின் சடலம்
ADDED : ஜூலை 07, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவறையில், மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை பீளமேடு பகுதியில், தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில், கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்தார்.
நேற்று காலை அவர், மருத்துவமனை கழிவறையில் சடலமாக கிடந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பவபூரணியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.