ADDED : நவ 22, 2026 05:28 PM
அ நிறம் | அளவு
கோவை: கொடிசியா தொழில் வர்த்தக கண்காட்சி அரங்கில் நடந்த மூன்று நாள் ‘மெடிக்கான் 2026’ கண்காட்சி, நேற்றுடன் நிறைவு பெற்றது.
மருத்துவமனைக்கு தேவையான அனைத்து கருவிகள், தனி நபருக்கு உதவிடும் கருவிகள், ஆபரேஷன் தியேட்டர்களில் பயன்படும் புதிய தொழில்நுட்பங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளிலும் கற்க உதவும் மாடல்கள், மருத்துவ கருவிகள் ஏற்றுமதி செய்ய ஆலோசனைகள் கண்காட்சியில் வழங்கப்பட்டன.
மருத்துவமனைகள், தொழில் முனைவோர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.
