/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
/
பழங்குடியின மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
பழங்குடியின மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
பழங்குடியின மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
ADDED : மார் 01, 2024 11:46 PM

ஆனைமலை;ஆனைமலை பகுதியில், பழங்குடியின மக்களை நேரடியாக சந்தித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை தொகுதியில் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதில், பழங்குடியின மக்களையும் பட்டியலில் சேர்க்கும் வகையில் வீடு, வீடாக நேரடியாக சென்று அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சின்னார்பதி பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, மற்றும் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்ட கலெக்டர் மற்றும் சப் - கலெக்டர் அறிவுரையின்படி, நவமலை, சின்னார்பதி பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசு நலத்திட்டங்கள் பெறவும் இது உதவியாக இருக்கும். தொடர்ந்து, டாப்சிலிப், கோழிகமுத்தி பழங்குடியின மக்களையும் சந்தித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.

