ADDED : ஜூன் 02, 2026 11:38 PM

கோவை: பருத்தி இறக்குமதி வரிக்கு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மத்திய அரசு விலக்களித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சைமா சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் டெல்லியில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், ஜவுளித்துறை மூலம் சுமார் 3.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்க்ள. இந்த அறிவிப்பால் அவர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க முடியும். சர்வதேச சந்தையிலும் பருத்தி விலை சரிவை சந்திக்கிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களை பயன்படுத்தி, 350 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கையும், 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு இலக்கையும் ஜவுளித்துறை எட்டு வதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும், என்றார்.
இந்த சந்திப்பின்போது பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உடனிருந்தார்.
