/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்புக்கூட்டல் ஆராய்ச்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மதிப்புக்கூட்டல் ஆராய்ச்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதிப்புக்கூட்டல் ஆராய்ச்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதிப்புக்கூட்டல் ஆராய்ச்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 24, 2025 11:34 PM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையத்துக்கிடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மல்பெரி பழம் மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண் பல்லைக் கழகம் மற்றும் ஓசூரில் அமைந்துள்ள மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இணைந்து, வேளாண் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பல்கலைக் கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொ) தமிழ் வேந்தன், மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலைய இயக்குனர் இசிதா நாயக், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின் வாயிலாக, மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் பட்டுப்புழுவியல் துறையில், அதிக பழ மகசூலை கொடுக்கக் கூடிய மல்பெரி இனங்களை கண்டறியவும், மல்பெரி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கவும் ஏற்றவாறு, ஆராய்ச்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் சார்பில், விஞ்ஞானிகள் திரிவேணி, லோகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, பட்டுப்புழுவியல் துறை தலைவர் முருகேஷ், உதவிப் பேராசிரியர் பிரிதர்ஷினி ஆகியோர் மேற்கொண்டனர்.