/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரி-சோகோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ரத்தினம் கல்லுாரி-சோகோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரத்தினம் கல்லுாரி-சோகோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரத்தினம் கல்லுாரி-சோகோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : நவ 11, 2025 01:09 AM

கோவை: தொழில் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் சோகோ நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன், சோகோ நிறுவனத்தின் சர்வதேச தலைவர் (கற்றல் மற்றும் புதுமை) ரமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், கல்வியில் ஒத்துழைப்பு மற்றும் தொழில்துறையின் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதோடு, மாணவர்கள் சோகோ புக் ஸ் எனும், உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் கிளவுட் அடிப்படையிலான கணக்கியல் தளத்தில் நேரடி அனுபவத்தைப் பெற வாய்ப்பை வழங்குகிறது.
இதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, ஆட்டோமேஷன், மற்றும் டிஜிட்டல் கணக்கியல் நடைமுறைகள் ஆகிய துறைகளில் நடைமுறை அறிவைப் பெற்று, நவீன தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தயாராக முடியும். இத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனையும் உலகளாவிய அளவில் போட்டியிடும் திறனையும் வலுப்படுத்தும்.