ADDED : செப் 06, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கோவை: அவினாசிலிங்கம் பல்கலை, சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
துணைவேந்தர் பாரதி ஹரிசங்கரும் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியில் மதிப்புமிக்க அனுபவத்தை வழங்குவதோடு, கல்வி சார்ந்த கற்றலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்க உதவும் என, துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் கூறினார்.
