/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிக்கு 'டிராபி'
/
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிக்கு 'டிராபி'
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிக்கு 'டிராபி'
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிக்கு 'டிராபி'
ADDED : அக் 07, 2024 12:52 AM

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி முதலிடம் பிடித்தது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த, 3 முதல், 5ம் தேதி வரை நடந்தது. இதில், 20 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுக்களை அடுத்து, நடந்த முதல் 'லீக்' போட்டியில் குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி அணி, 59-48 என்ற புள்ளி கணக்கில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது.
தொடர்ந்து, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 80-54 என்ற புள்ளி கணக்கில் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும், என்.ஜி.பி., கல்லுாரி, 74-58 என்ற புள்ளி கணக்கில் குமரகுரு கல்லுாரி அணியையும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 86-33 என்ற புள்ளிகளில் ரத்தினம் கல்லுாரி அணியையும் வென்றன.
என்.ஜி.பி., கல்லுாரி அணி, 75-69 என்ற புள்ளி கணக்கில் ரத்தினம் கல்லுாரியையும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 68-38 என்ற புள்ளி கணக்கில் குமரகுரு கல்லுாரி அணியையும் வென்றன. ஆறு 'லீக்' போட்டிகளின் முடிவில், பி.எஸ்.ஜி., கல்லுாரி முதல் பரிசை தட்டியது.
இரண்டாம் பரிசை, டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரியும், மூன்றாம் பரிசை குமரகுரு கல்லுாரியும், நான்காம் பரிசை ரத்தினம் கல்லுாரி அணிகளும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., கல்லுாரி செயலாளர் கண்ணய்யன், முதல்வர் பிருந்தா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.