/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்கள் கபடி போட்டி; இந்துஸ்தான் கல்லுாரி அபாரம்
/
ஆண்கள் கபடி போட்டி; இந்துஸ்தான் கல்லுாரி அபாரம்
ADDED : அக் 24, 2024 10:00 PM
கோவை : அண்ணா பல்கலை ஆண்கள் கபடி போட்டியில் இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி அணி, தனலட்சுமி இன்ஜி., கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(10வது மண்டலம்) ஆண்களுக்கான கபடி போட்டிகள், கற்பகம் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. இதில், 22 அணிகள் பங்கேற்ற நிலையில் பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியும், நேரு இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதின.
ஆக்ரோஷமாக விளையாடிய இந்துஸ்தான் கல்லுாரி அணி வீரர்கள், 45-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டாம் அரையிறுதியில், தனலட்சுமி இன்ஜி., கல்லுாரி அணி, 32-23 என்ற புள்ளி கணக்கில் ஜெ.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி அணி, 52-36 என்ற புள்ளி கணக்கில் தனலட்சுமி இன்ஜி., கல்லுாரி அணியை வென்று 'சாம்பியன்ஷிப்' பெற்றது. கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் 'சாம்பியன்ஷிப்' வென்ற இந்துஸ்தான் கல்லுாரி அணி வீரர்களை பாராட்டினர்.