/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்கள் கபடி போட்டி; வீரர்கள் ஆக்ரோஷம்
/
ஆண்கள் கபடி போட்டி; வீரர்கள் ஆக்ரோஷம்
ADDED : அக் 16, 2024 12:13 AM
கோவை : அண்ணா பல்கலை ஆண்கள் கபடி போட்டியில், சக்தி இன்ஜி., கல்லுாரியும், அண்ணா பல்கலை மண்டல மையமும் வெற்றி பெற்றன.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளுக்கு இடையே(11வது மண்டலம்) ஆண்களுக்கான கபடி போட்டி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
அண்ணா பல்கலை, 11வது மண்டல விளையாட்டு செயலாளர் சரவணமூர்த்தி, குமரகுரு கல்லுாரி முதலாம் ஆண்டு துறை தலைவர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில், காரமடை, ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணியும், ஊட்டி சி.எஸ்.ஐ., இன்ஜி., கல்லுாரி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக்தி கல்லுாரி அணி வீரர்கள், 32-24 என்ற புள்ளி கணக்கில், சி.எஸ்.ஐ., கல்லுாரி அணியை வென்றனர்.
இரண்டாம் ஆட்டத்தில், பி.பி.ஜி., ஐ.டி., கல்லுாரி அணியும், அண்ணா பல்கலை மண்டல மைய அணியும் மோதின. சற்று ஆக்ரோஷமாக விளையாடிய அண்ணா பல்கலை அணி வீரர்கள், 45 புள்ளிகளை குவித்தனர்.
வெற்றி முனைப்புடன் விளையாடிய பி.பி.ஜி., கல்லுாரி அணியினர், 34 புள்ளிகளுடன் தோல்வியை தழுவினர். தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.