/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோராக உயர மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
/
தொழில்முனைவோராக உயர மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 27, 2024 11:17 PM

பொள்ளாச்சி: மாணவர்கள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என, பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், மாணவர்களுக்கு 'தலைமையை வெளிக்கொணர்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, அனைவரையும் வரவேற்றார்.
கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் வேலைவாய்பை பெறுவதை விட மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் தொழில் முனைவோராக வரவேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், 'தலைவருக்கும் மேலாளருக்கும் உள்ள வேறுபாடுகள், தலைமை பண்பு, முடிவெடுக்கும் திறனை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல்' குறித்து விளக்கி பேசினார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர் பிரகலாத் பதில் அளித்தார். மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லுாரி செயலாளர் ராமசாமி, என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், மேலாளர் ரகுநந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சரவணபாபு நன்றி கூறினார்.