/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் அவலம் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம்
/
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் அவலம் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம்
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் அவலம் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம்
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் அவலம் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம்
ADDED : ஜன 02, 2026 05:10 AM

கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பணிமனைக்கு எதிரே, 7 கோடி ரூபாயில் மாநகராட்சியால் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், 2010 ல் திறந்து வைத்தார். அன்னுார், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோத்தகிரி, ஊட்டி செல்வதற்கான பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.
காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது; சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் இட நெருக்கடி குறைந்தது. ஆனால், அன்னுார், சத்தி, மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து வந்தவர்கள், திரும்பிச் செல்வதற்கு மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் செல்ல சிரமப்பட்டனர். காந்திபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் சென்று, அங்கிருந்து வேறொரு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால், காந்திபுரத்தில் இருந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் பயன்பாடு இல்லாமல் முடங்கியது. தினமலர் செய்தி வெளியிட்டதும் மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனினும், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு மோசமாக இருக்கிறது. பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மறுபுறத்தில் ஒரே நேரத்தில் 11 பஸ்கள் நிறுத்தும் வகையில் ரேக்குகள் இருக்கின்றன. அதை பயன்படுத்தாததால் புதர்மண்டி கிடக்கிறது. வார்டு சுகாதார அலுவலகம் பஸ் ஸ்டாண்ட் முதல் தளத்தில் செயல்படுகிறது. இருப்பினும், திறந்தவெளியில் குவியலாக குப்பை குவிக்கப்படுகிறது. கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளி கழிப்பறை பயன்பாடின்றி அசுத்தமாக இருக்கிறது. பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
”பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு மோசமாக இருப்பதற்கு அதன் மேற்கூரையே சாட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்ட்டை பராமரிக்க, அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. தி.மு.க. மேயர், எம்.பி., கவுன்சிலர்களும் கண்டுகொள்ளவில்லை” என மக்கள் குமுறுகின்றனர்.

