/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் மரியாதை
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் மரியாதை
ADDED : டிச 24, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 37-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, அ.தி.மு.க., வினர் பல்வேறு பகுதிகளிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை அ.தி.மு.க., சார்பில் நேற்று அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., படத்துக்கு, கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.