/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளம் பயிர் செழிக்க மானியத்தில் நுண்ணூட்டம்
/
சோளம் பயிர் செழிக்க மானியத்தில் நுண்ணூட்டம்
ADDED : செப் 24, 2024 11:45 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும் 2,500 ஹெக்டேர் அளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு, தற்போது வரை, 1,700 ஹெக்டேரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், ரபி பருவத்தில் கூடுதலாக சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை ஊக்குவிக்கும் நோக்கில் வேளாண் துறை சார்பில், சோளத்துக்கு தேவையான நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் விதை போன்றவை, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. கிணத்துக்கடவு மற்றும் வடசித்தூர் வேளாண் மையங்களில் நுண்ணூட்டங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நுண்ணூட்டம், உரம் போன்றவைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
நுண்ணூட்டம் கொள்முதல் செய்யும் போது, முடிந்த வரை ரொக்கப் பரிவர்த்தனையை தவிர்த்து, 'டெபிட்' மற்றும் 'ஆன்லைன்' போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்த வேண்டும் என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.